Monday, 19 Nov 2018
You are here:

உலக உளநலதினம் - 2013

எமது பாடசாலையில் உலக உளநலதினத்தை (10.10.2013) முன்னிட்டு 2013.10.15ந் திகதி செவ்வாய்க்கிழமை "உளநலமும் வயதுவந்த முதியோரும்" என்ற தொனிப்பொருளுக்கு அமைய "முதுமையின் அனுபவத்தை உணர்வுடன் போற்றுவோம்" என்ற மகுடவாசகத்தை அடிப்படையாகக்கொண்டு முதியவர்கள் பத்துப்பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இக் கௌரவிப்பானது எமது பாடசாலையின் அதிபர் திரு. T.இருதயராஜா குரூஸ் அவர்களின் தலைமையில் எமது பாடசாலை மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பொறுப்பாசிரியரான திருமதி. M.T.தேவமலர் அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டார்.

படங்கள்

வாணி விழா - 2013

எமது பாடசாலையில் வாணி விழாவானது வருடாந்தம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது. அந்தவகையில் இவ்வருடமும் எமது பாடசாலை  அதிபர் திரு. T.இருதயராஜா குரூஸ் அவர்களின் தலைமையில் எமது பாடசாலை மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

படங்கள்

ஆசிரியர் தின விழா - 2013

எமது பாடசாலையில் 2013ம் ஆண்டிற்கான ஆசிரியர் தினமானது 08.10.2013 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் எமது அதிபர் திரு. T.இருதயராஜா குரூஸ் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களை மாணவர்களின் பெற்றோர்கள் கௌரவித்து ஊக்கப்படுத்தினர்.

படங்கள்

கால் கோள் விழா - 2013

எமது பாடசாலையின் தரம் 1 இற்கான வரவேற்பு விழாவானது 18.01.2013 அன்று மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இதன்போது தரம் 2 மாணவர்கள் தரம் 1 மாணவர்களை சிறப்புடன் வரவேற்றனர். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்தந்தை மெல்வின், அருட் சகோதரர் மைக்கல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

எமது அதிபர் தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வைத் தொடந்கிவைத்தார். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவரின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்புரையும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

புதிதாக இணைந்த தரம் 1 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆசீர்வாதம் பெறும் நிகழ்வு நடைபெற்று நன்றியுரையுடன் இவ்விழாவானது இனிதே நிறைவு பெற்றது.

படங்கள்