Friday, 17 Aug 2018
You are here:
பாடசாலை கீதம்

 

அன்பும் அருளும் கொண்டு

அகமும் மலர்ந்திடவே

இன்புடன் இறையோன் - பாதம்

என்றும் என்றும் போற்றி செய்வோம்

....................................................அன்பும்...


தங்க நிகர் பரி

காரிகண்டல் எனும் ஊர்

தரணியில் நிறைவு பெற்று

தகைமையோடிலங்கவே

உண்மையும் நேர்மையும்

ஒழுக்க நெறிகள் கொண்டு

உன்னத நிலையும் பெற்று

ஒளியாக விளங்கவே

மண்ணக மீதிலே மாட்சியும்

பெற்றென்றும் மாணவ மணிகள்

தன்னை உருவாக்கும் பள்ளியாய்

....................................................அன்பும்...


சத்தியம் தன்னிலே

சகலரும் வளம் பெற்று

சகல அறிவியலும்

சன்மார்க்க வழிமுறையும்

இத்தரை மீதிலே எழில்

பொங்கும் பள்ளியாய்

என்றுமென்றும் மலர்ந்திடவே

இறைவனே ஆசீர் தாராய்

....................................................அன்பும்...