Friday, 17 Aug 2018
You are here:
பரிசளிப்பு விழாவும் ஔி விழாவும் 2015
Wednesday, 02 December 2015 00:00

எமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஔி விழாவும் 02.12.2015 அன்று கல்லூரி அதிபர் திரு இருதயராஜா குரூஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக Rev.Fr.S.Marcus (Dean of Murunkan deanery, St. Joseph Church, Katkidanthakulam) அவர்களும்

சிறப்பு விருந்தினராக Bro.J.Raja Jeganathan (Methodist Church, Parikarikandal) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


விருந்தினர் வரவேற்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது. இதன்பொது 2014ம் ஆண்டில் ஒவ்வொரு பாடத்திலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கபட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர் 2014ம் ஆண்டின் சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு 2014ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஐந்து மாணவர்களும், 2014 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவியும், 2014 க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தொிவான மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் 2015ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவரின் பெற்றோரால் அதிபர், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் எமது பாடசாலையில் சிறப்பாக சேவையாற்றி வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரிய சேவையில் சிறப்பாக 25 வருடங்களைப் பூர்த்தி செய்து மணிவிழா காணும் எமது ஆசிரியர்கள் நால்வரும் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்